|
.
|
Excerpt
I sing of the fancies of the beauties of the rays of the morn.
Is it a nicety of melting gold, softening its brightness,
And making honey of it, spreading everywhere?
Will those who sing the praise of the wonder
Of light stealing away the space rendering it bright,
Ever find an apt comparison for it?
They say that eyes are a delight.
Light, the eye of the eye, measures the space.
Is it not then a greater delight?
Even those who contemplate the Primordial Unique
Say that light expands limitless.
Can there be then anything like light in the whole world?
I worshipped light that morning,
Light that plays wondrous tricks,
Making the grass laugh, making the flower a wonder,
Making the soil fine, adding freshness to the waters,
Making a space of the skies.
By Dr.N.Ramani
Back to CONTENT INDEX | Feedback
|
சில வரிகள்
காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்.
தங்க முருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோ ரிங்கிதமோ? வான்வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?
கண்ணையினி தென்றுரைப்பர்; கண்ணுக்குக் கண்ணாகி
விண்ணை யளக்குமொளி மேம்படுமோ ரின்பமன்றோ?
மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தைசெய்யும்
மேலவரு மஃதோர் விரியுமொளி யென்பாரேல்,
நல்லொளிக்கு வேறுபொருள் ஞானமிசை யொப்புளதோ?
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி,
மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சிதந்து,
விண்ணை வெளியாக்கி, விந்தைசெயுஞ் சோதியினைக்
காலைப்பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்.
|