:: HOME | VC'S MESSAGE | CONTENTS | CREDITS | GALLERY | DOWNLOADS | SITE MAP | HELP ::

.

 

An Excerpt (Lines 1-36)

An effulgence of bewitching beauty emerging
Like a sapphire against the blue ocean flaming
In the tender rays of the Sun rising;
West of the holy southern city of Sentamizh Puthuvai
With bounteous shores where the swift waves come
Chanting Vedic hymns
And embrace with unfaltering rhythm.
A spreading mango grove, in a short distance
Where the hunters from villages in the far directions
Swarm to shoot birds.
In that grove, one morning,
On a feast day when the hunters came not,
What a marvel, this delicious melody,
A female bird sitting on a lofty branch with desire
Was singing so as to make
The hairs of the male birds bodies rise,
In ecstasy and their energy dissipating
And their soul’s fire surging up
All the birds of the grove assembled
To listen in rapture, discarding their morning duties.
As if ambrosia blended with whistling wind
And the flavour of lightning spread softly and sweetly
Or a heavenly enchantress took this shape
And displayed her grandeur.
As the poetic frenzy surges up and reality recedes
In the long dream which the poets see in daylight
In the grove I saw a maiden cuckoo.
I became ecstatic at the melodious song.
“Can’t I get a koel’s shape, giving up the human frame
And live forever loving this bird without separation?
Can’t I lose myself in the flame of music?”
Sang yearningly thinking diverse thoughts
Can even the immortals hear what I heard that day?
Hidden thoughts flashed in my mind
In the cuckoo sounds of the kuyil’s song
That subject I shall tell the world
But denizens of the Earth
What can I do for that wondrous voice?

By Dr.K.Chellappan

Back to CONTENT INDEX | Feedback

 

வரிகள் 1-36

காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருத்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ்த் தென்புதுவை யென்னுநங திருநகரின்
மேற்கே, சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை;
நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்
வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை;
அந்த மாஞ்சோலை யதனிலோர் காலையிலே,
வேடர் வாராத விருந்துத் திருநாளில்,
பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற,
ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல்பெருக,
சோலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,
இன்னமுதைக் காற்றினிடை எங்குக் கலந்ததுபோல்,
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்
இந்தவுறு வெய்தித்தன் ஏற்றம் விளக்குதல்போல்,
இன்னிசைத் தீம்பாட லிசைத்திருக்கும் விந்தைதனை
முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப்
பட்டப் பகலிலே பாவர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவி னிகழ்ச்சியிலே-கண்டேன் யான்
கன்னிக் குயிலன்று காவிடத்தே, பாடியதோர்
இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய்,
மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ?
இனிதிக் குயிற்பேட்டை யென்றும் பிரியாமல்,
காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?
நாதக் கனலினிலே நம்முயிரைப் போக்கோமோ?
என்று பலவெண்ணி யேக்கமுறப் பாடிற்றால்.
அன்றுநான் கேட்ட தமரர்தாங் கேட்பாரோ?
குக்குக்கு வென்று குயில்பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாந் தோன்றியதென் சிந்தைக்கே
அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்;
விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்!

 

   ©Barathiyar University, Coimbatore
Last update: 24 Feb 2007