|
.
|
MY LADYLOVE KANNAMMA
Is the flame of your eyes, Kannamma,
The sun and the moon?
Is the round dark eye, Kannamma,
The darkness of the skies?
The diamonds studded
On the dark blue saree
Are the stars seen at midnight.
Is the beautiful smile of yours
The light of the flower in the grove?
The waves of the seas, dear,
Are the waves of your passion.
The beautiful song of the koel
Is the sweetness of your voice.
Virgin in prime, Kannamma,
I love to make love to thee.
You speak of ethics, Kannamma,
What is the need?
Could anything hold back, Kannamma,
The one frenzied?
We will get married later
With the consent of the elders.
Could I ever wait, dear? See!
A kiss on your cheek!
Back to CONTENT INDEX | Feedback
|
கண்ணம்மா என் காதலி
சுட்டும்விழிச் சுடர்தான், - கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி, - கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?
பட்டுக் கருநிலப் - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடநிசியில் - தெரியும்
நட்சத்தி ரங்களடீ!
சோலைமல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக்கட லலையே - உனது
நெஞ்சி லலைகளடீ!
கோலக்குயி லோசை - உனது
குரலி னிமையடீ!
வாலைக் குமரியடீ, - கண்ணம்மா!
மருவக் காதல்கொண்டேன்.
சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ?
ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா !
சாத்திர முண்டோடீ?
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்புசெய்வோம்;
காத்திருப் பேனோடீ? - இது பார்,
கன்னத்து முத்தமொன்று!
|