:: HOME | VC'S MESSAGE | CONTENTS | CREDITS | GALLERY | DOWNLOADS | SITE MAP | HELP ::

.

 

MY CHILD KANNAN

Tiny little parrot, Kannamma,
My treasure trove!
You came about the world
To undo my distress.

Nectar of a blooming child, Kannamma,
Lilting portrait of gold!
The honey of a dancing tippler,
To be held in an affectionate hug.

As you come running about, Kannamma,
My heart feels full!
Looking at you in playful mirth,
My soul flows to embrace you.

Affectionate kiss on your forehead
Makes my pride grow skyhigh.
A word in appreciation of you from all around
Makes me feel tingled all about.

Loving kiss on the lips
Makes my heart tipsy through and through.
To embrace you, Kannamma,
Is to become frenzied.

When your face becomes crimson,
My mind flutters in anxiety.
When you arch your brows,
My hearts feels a pang.

When your eyes shed tears,
My heart bleeds.
You are the apple of my eye Kannamma,
Is not my life yours?

With your lilting words, Kannamma,
You dispel all distress.
With your bright smile, Kannamma,
You cure me of my arrogance.
Is there any book that can have,
Sweet stories as you can narrate?
Is there any god who can bestow
Love as you can?

Is there any gem of purest ray,
That can adorn my chest as you can?
Is there any wealth making life noble,
As you are, Kannamma?

By Dr.N.Ramani

Back to CONTENT INDEX | Feedback

 

 

கண்ணம்மா என் குழந்தை

சின்னஞ் சிறுகிளியே! கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே - உலகில்
ஏற்றம் புரியவந்தாய்!
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா!
பேசும்பொற் சித்திரமே!
அள்ளியணைத்திடவே - என் முன்னே
ஆடிவருந் தேனே!
ஓடி வருகையிலே, - கண்ணம்மா!
உள்ளங் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவுதடீ.
உச்சி தனைமுகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடீ;
மெச்சி யுனையூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிக்குதடீ.
கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ;
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா!
உன்மத்த மாகுதடீ.
சற்றுன் முகஞ்சிவந்தால் - மனது
சஞ்சல மாகுதடீ;
நெற்றி சுருங்கக்கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்குதடீ.
உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்னெஞ்சில்
உதிரங் கொட்டுதடீ;
என்கண்ணில் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்னதன்றோ?
சொல்லு மழலையிலே, - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடுவாய்;
முல்லைச் சிர்ப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடுவாய்.
இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ?
மார்பி லணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிகளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிதுமுண்டோ?

 


   ©Barathiyar University, Coimbatore
Last update: 24 Feb 2007