:: HOME | VC'S MESSAGE | CONTENTS | CREDITS | GALLERY | DOWNLOADS | SITE MAP | HELP ::

.

 

NATIONAL LEADERS
MAHATMA GANDHI

Hail to thee, my sire!
Gandhi Mahatma,
You appeared to redeem
This Bharath nation lying
In the decay of abjectivity,
In excessive poverty,
In vitiated freedom.
Hail to thee! Hail to thee!

You played a trick
To make the people of the nation
Assume leadership in the world
With slavery dispelled,
Wealth achived,
Nobility of citizenry realized,
Education and wisdom enhanced.
You enjoy illimitable renown thereof.
You became the foremost on the Earth.

By Dr.R.Saravana Selvan

Back to CONTENT INDEX | Feedback

 

 

தாதாபாய் நவுரோஜி

முன்னோளி லிராமபிரான் கோதமனா
தியபுதல்வர் முறையி னீன்று
பன்னாடு முடிவணங்கத் தலைமைநிறுத்
தியவெமது பரத கண்ட
மின்னாளிங் கிந்நாளின் முதியோளாய்ப்
பிறரெள்ள வீழ்ந்த காலை
அன்னாளைத் துயர்தவிர்ப்பான் முயல்வர்சில
மக்களவ ரடிகள் சூழ்வாம்.
அவ்வறிஞ ரனைவோர்க்கு முதல்வனாம்
மைந்தன்ற னன்னை கண்ணீ
ரெவ்வகையி னுந்துடைப்பே னின்றேலென்
உயிர்துடைப்பே னென்னப் போந்தி
யெவனநாள் முதற்கொடுதா
னெண்பதின்மேல் வயதுற்ற வின்று காறும்
செல்வியுறத் தனதுடலம் பொருளாவி
யானுழைப்புத் தீர்த லில்லான்.
கல்வியைப்போ லறியுமறி வினைப்போலக்
கருணையுமக் கருணை போலப்
பல்விதவூக் கங்கள் செயுந் திறனுமொரு
நிகரின்றிப் படைத்த வீரன்
வில்விறலாற் போர்செய்தல் பயனிலதா
மெனவதனை வெறுத்தே யுண்மைச்
சொல்லிறலாற் போர்செய்வோன் பறிர்க்கன்றித்
தனக்கûதுயாத் துறவி யாவோன்.
மாதாவாய் விட்டலற வதைச்சிறிது
மதியாதே வாணாள் போக்குந்
தீதாவார் வரினுமவர்க் கினியசொலி
நன்குணர்த்துஞ் செல்வி யாளன்
வேதாவா யினுமவனுக் கஞ்சாமே யுண்மை நெறி
விரிப்போ னெங்கள்
தாதாவாய் விளங்குறுநற் றாதாபாய்
நவுரோஜி சரணம் வாழ்க!
எண்பஃதாண் டிருந்தவ னினிப்பல்லாண்
டிருந்தெம்மை யினிது காக்க!
பண்பல்ல நமக்கிழைப்போ ரறிவுதிருந்
துக! எமது பரத நாட்டுப்
பெண்பல்லார் வயிற்றினுமந் நவுரோஜி
போற்புதல்வவர் பிறந்து வாழ்க!
விண்புல்லு மீன்களென லவனன்னா
ரெவ்வயினு மிகுக மன்னோ.


 


   ©Barathiyar University, Coimbatore
Last update: 24 Feb 2007