|
.
|
THE COMMUNITY OF BHARATH
Hail the commuity of Bharath! Hail, hail!
Hail the commuity of Bharath! Jaya jaya jaya
It is a commune of thirty crores,
A community of common wealth.
It is an incomparable community
A novelty in the world – Hail!
Will anymore be the custom
Of snatching the food of one by the other?
Will anymore be a life
Of one watching the woe of the other?
Will such a life be on our land?
Will such a life be amidst us?
This is a nation that bestows in abundance
Fruits, roots, grains,
Countless in all, this nation
Gives them incalculable day in and day out. – Hail!
We will make a law heretofore.
We will abide by it for ever.
If ever an individual has to go without food,
We will destroy the whole world. – Hail!
Kanna the Lord declared
That it is He who is in all the lives.
India will bestow on the world
A state wherein all achieve the status of the divine.
Yes, India will bestow on the world. – Yes, yes indeed!
India will bestow on the world. – Hail!
All are of the same clan.
All are of the same race.
All are of the same status.
All are of the same price.
All are the kings of this nation.
We all are kings of this nation. – Yes.
We all are kings of this nation.
By Dr.N.Ramani
Back to CONTENT INDEX | Feedback
|
பாரத ஸமுதாயம்
பாரத ஸமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க
பாரத ஸமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய
முப்பது கோம ஜனங்களின் ஸங்க
முழுமைக் கும்பொது உடைமை
ஒப்பி லாத ஸமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை - வாழ்க (பாரத)
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மினியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை யினியுண்டோ - புலனில்
வாழ்க்கை யினியுண்டோ - நம்மி லந்த
வாழ்க்கை யினியுண்டோ
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும்பெரு நாடு
கனியுங் கிழங்குந் தானியங்களும்
கணக்கின்றித்தரு நாடு - இது
கணக்கின்றித்தரு நாடு - நித்தநித்தம்
கணக்கின்றித்தரு நாடு - வாழ்க (பாரத)
இனியொ ருவிதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனியொ ருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை யழித்திடுவோம் - வாழ்க (பாரத)
எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்
என்றுரைத் தான்கண்ண பெருமான்;
எல்லாரு மமரநிலை யெய்துநன்முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க (பாரத)
எல்லாரு மோர்குலம் எல்லாரு மோரினம்
எல்லாரு மிந்திய மக்கள்
எல்லாரு மோர்நிறை எல்லாரு மோர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க
|