:: HOME | VC'S MESSAGE | CONTENTS | CREDITS | GALLERY | DOWNLOADS | SITE MAP | HELP ::

.

 

BEST IN THE WORLD

Our nation is the best in the world
In knowledge, in wisdom – and
In prestige and in magnanimity – and
In music that pervades everywhere - and
In poetry, our nation is the best nation.
In courage, in bravery – and
In kindness, in hospitality – and
In nutshelling the knowledge to all
Our nation is the best nation

In wealth, in hard industry – and
In strength, in nobility – and
In having courageous sea of men capable of safeguarding
Our nation is the best nation.

By Dr.R.Saravana Selvan

Back to CONTENT INDEX | Feedback

 

 

பாரத நாடு

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
பாரத நாடு
ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே,
கானத்தி லேஆமு தாக நிறைந்த
கவிதையி லேயுயர் நாடு-இந்தப் (பாரு)
தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே,
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேயுயர் நாடு-இந்தப் (பாரு)
நன்மையி லேயுடல் வன்மையிலே-செல்வப்
பன்மையி லேமறக் தன்மையிலே,
பொன்மயி லொத்திடு மாதர்தங் கற்பின்
புகழினி லேயுயர் நாடு-இந்தப் (பாரு)
ஆக்கத்தி லேதொழி லூக்கத்திலே-புய
வீக்கத்தி லேயுயர் நோக்கத்திலே,
காக்கத் திறல்கொண்ட மல்லர்தஞ் சேனைக்
கடலினி லேயுயர் நாடு-இந்தப் (பாரு)
வண்மையி லேயுளத் திண்மையிலே-மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே,
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேயுயர் நாடு -இந்தப் (பாரு)
யாகத்தி லேதவ வேகத்திலே-தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்திகொண்ட டார்தம்
அருளினி லேயுயர் நாடு-இந்தப் (பாரு)
ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றற்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபய னீந்திடுங் காலி
யினத்தினி லேயுயர் நாடு-இந்தப் (பாரு)
தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே-கனி
யீட்டத்தி லேபயி ரூட்டத்திலே
தேட்டத்தி லேயடங் காத நிதியின்
சிறப்பினி லேயுயர் நாடு-இந்தப் (பாரு)

 


   ©Barathiyar University, Coimbatore
Last update: 24 Feb 2007