|
.
|
ADDRESSING THE WORLD…
Those standing, the ones walking, the ones flying,
Are you all only a dream? Or varied visual illusions?
The learning, the listening, the thinking,
Are you all petty illusions? Isn’t there any deep truth within you?
O sky, mild light, dense trees,
Are you all only a mirage? Simple errors of perception?
Since all that is past has dissipated like a dream,
Am I a dream too? Is this world also a lie?
Are the single idea called Time and the many thoughts of scenes
And the tapestries lies? Are their qualities also unreal?
If the appearance of tres in the grove is due to a seed
Is the grove a falsehood? Can these words be considered valid?
If all that is seen would disappear, won’t we see all that has disappeared?
Will fate continue for ever in futile falsehood?
We believe in the seen. If not seen, no firm faith indeed.
The seen is Sakthi. This scene is eternal.
(Author’s postscript : The first stanza speaks about the manifest form
in the world. The second stanza speaks about the actions of the manifest.
The third stanza wonders if the forms and their qualities are false? The
question is this: “Is only the form of the scorpion a falsity? Is not
its sting also a falsity?”
By Dr.K.Chellappan & Dr.N.Ramani
Back to CONTENT INDEX | Feedback
|
பொய்யோ மெய்யோ
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந்தானா?-பலதோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானவினீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தமிந்தே போனதால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே யொருநினைவுங் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லிலொடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்த தெல்லாம்
காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே யுறுதிகண்டோம், காண்பதல்லா லுறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.
|