|
.
|
VICTORY OVER THE SELF
Won’t the arms pick up,
That which the eye could see?
Lo!
The sky seen on earth,
Won’t it be amenable then?
Having striven day in and day out,
Are we to become wearied at the end?
Parasakthi permeates
The sky, the earth, the seen and the thought.
Whatever the boon or distinction or success,
Whatever the greatness,
Possible do they become
When you win over the Self.
Having understood the wisdom
In the words of the masters of the lore,
Will we ever remain ignoble
Without the might to master the Self?
AUDIO CONTENT
By Dr.N.Ramani
Back to CONTENT INDEX | Feedback
|
ஆத்ம ஜயம்
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட
மாட்டாவோ?-அட
மண்ணில் தெரியுது வானம், அதுநம் வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங் கிறுதியிற் சோர்வோமோ?-அட
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலு மேவு பரா சக்தியே.
என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ
தன்னைவென் றாலவை யாவும் பெறுவது சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள் முற்று முணர்ந்தபின்னும்
தன்னைவென் றாளும் திறமை பெறாதிங்குத் தாழ்வுற்று நிற்போமோ?
|