|
.
|
IN PRAISE OF KALI THE GREATEST
In the forest of Time
Is the Tree of the universe manifest.
Humming and hovering over the Tree
Is the gnat named Kali,
With fiery eyes and legs six,
The source of the six diverse Paths –
So seen and described by the Vedic scholars of lore.
The flood of Shakthi extends up, falls beneath
And spreads through every direction,
Becoming the sky and the earth.
Strange exigencies of existence are of her tricks.
The heart of mine the poor shall become the trough
Into which falls the mighty flood of Shakthi,
The Vedas and the music thereof.
Manifestation of Love,
She brings all miseries.
Creating and dispensing are her deeds.
Redeemed are those who realize this.
Primordial and knowledge illimitable is she.
Your limited knowledge is a gesture of hers.
She is the boundless pond of delight.
Manifest delight,
She brings all miseries.
These are all her tricks.
Image of Truth unmanifest.
Realising this and appealing to Om Shakthi
The holy wise achieve the fire of wisdom,
Burns to ashes the unreal devil of the ego.
Primordial Shiva and his flame Shakthi
Are here and there and everywhere.
When they fuse into One
The whole world is extinct.
There is nothing other than them.
There is nothing without them.
To know this is to dispel all distress.
This awareness is of the Transcendent.
Those who have attained the feet
Of Kali the everlasting, the pure, the wise, the essence
Rule the world justly for long;
Enjoy the pleasures of wealth abundant;
Live long on the earth;
Achieve anything as desired;
Escape all harm whatsoever.
Such is the assurance of the Vedas perfect.
AUDIO CONTENT
By Dr.N.Ramani
Back to CONTENT INDEX | Feedback
|
மகாகாளியின் புகழ்
காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீது
காளிசக்தி யென்ற பெயர் கொண்டு ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு தழல்
காலும்விழி நீலவண்ண மூல அத்து வாக்களெனும்
கால்களா றுடையதெனக் கண்டு மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு
மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணு மண்ணு மானசக்தி வெள்ளம் இந்த
வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக
வேண்டுநித்த மென்றனேழை யுள்ளம்.
அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை அவள்
ஆதியா யநாதியா யகண்டவறி வாவளுன்றன்
அறிவுமவள் மேனியிலோர் சைகை அவள்
ஆனந்தத்தி னெல்லையற்ற பொய்கை
இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
இ·தெலா மவள்புரியு மாயை அவள்
ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை எனில்
எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணியமுனிவர் நித்த
மெய்துவார் மெய்ஞ் ஞானமெனுந் தீயை எரித்
தெற்றுவாரிந் நானெனும்பொய்ப் பேயை.
ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சத்தியுந்தான்
அங்குமிங்கு மெங்குமுள வாகும் ஒன்றே
யாகினா லுலகனைத்தும் சாகும் அவை
யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்று மில்லையிதை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் இந்த
அறிவுதான் பரமஞான மாகும்.
நீதியா மரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்
நீண்டகாலம் வாழ்வர் தரைமீது எந்த
நெறியுமெய்து வர்நினைத்த போது அந்த
நித்தமுத்த சுத்த புத்த சத்த பெருங் காளிபத
நீழலடைந் தார்க்கில்லையோர் தீது என்றும்
நேர்மை வேதஞ் சொல்லும்வழி யீது.
|