|
.
|
HYMN TO KANNAN
How is it you are sour in raw fruits, Kanna the Lord!
How is it you are sweet in ripe fruits, Kanna the Lord!
How is it you become affliction in sickness, Kanna the Lord!
How is it you are invoked on austerities, Kanna the Lord!
How is it you are the comfort of the breeze, Kanna the Lord!
How is it you burn in the flames, Kanna the Lord!
How is it you are the slush in the mud, Kanna the Lord!
How is it you are light at the brink of the skies, Kanna the Lord!
How is it we praise and worship you, Kanna the Lord!
How is it you protect the weak, Kanna the Lord!
How is it you redeem those that praise you, Kanna the Lord!
How is it you exterminate the evil, Kanna the Lord!
AUDIO CONTENT
By Dr.N.Ramani
Back to CONTENT INDEX | Feedback |
கண்ணன் துதி
காயிலே புளிப்ப தென்னே கண்ண பெருமானே! நீ
கனியிலே இனிப்ப தென்னே கண்ண பெருமானே!
நோயிலே படுப்ப தென்னே கண்ண பெருமானே! நீ
நோன்பிலே உயிர்ப்ப தென்னே கண்ண பெருமானே!
காற்றிலே குளிர்ந்த தென்னே கண்ண பெருமானே! நீ
கனலிலே சுடுவ தென்னே கண்ண பெருமானே!
சேற்றிலே குழம்ப லென்னே கண்ண பெருமானே! நீ
திக்கிலே தெளிந்த தென்னே கண்ண பெருமானே!
ஏற்றிநின்னைத் தொழுவ தென்னே கண்ண பெருமானே! நீ
எளியர்தம்மைக் காப்ப தென்னே கண்ண பெருமானே!
போற்றினோரைக் காப்ப தென்னே கண்ண பெருமானே! நீ
பொய்யர் தம்மை மாய்ப்ப தென்னே கண்ண பெருமானே!
|