|
.
|
To
Vinayakar ( AKAVAL)
(An excerpt from Vinayakar Nanmani
malai)
I dare to speak that none so far dared speak.
I dare ask for a boon that none so far dared to ask.
The people, the birds,
The beasts, the insects, the grass and the plants,
Let all that live on earth
Be liberated from suffering by virtue of my acts,
And live with joy and love in willing harmony.
O God of gods!
Standing in the centre of the Empyrean of Gnana,
I will say, “Let love and peace prevail on the planet of earth.
Let all the varied lives
Live in joy, freed from sorrow, want and death!
Imbibing this with your holy ears,
And with compassion in your holy heart,
You will say, “Let that be so!” O Lord!
Today, now itself, grant me this boon.
O Primal source, the Child of boundless energy!
The Lunar Mouli! The Enduring Reality!
I surrender to you, I surrender to you.
By Dr.K.Chellappan
Back to CONTENT INDEX | Feedback
|
வினாயகர் நான்மணி மாலை (அகவல்)
பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்.
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்.
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் –
யாவுமென் வினையா லிடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட னிணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும் தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
பூமண் டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக துன்பமு மிமையு நோவுஞ்
சாவு நீங்கிச் சார்ந்தபல் லுயிரெல்லாம்
இன்புற்று வாழ்க என்பேன். இதனைநீ
திருச்செவிக் கொண்டு திருவுள மிரங்கி
அங்கே யாகுக என்பாய் ஐயனே!
இந்நாள் இப்பொழு தெனக்கிவ் வரத்தினை
அருள்வாய் தி மூலமே அநந்த
சக்தி குமாரனே சந்திர மவுலீ!
நித்தியப் பொருளே சரணம்
சரணம் சரணம் சரணமிங்குனக்கே!
|